நெட்டிசன்

ப்போலோ ‌மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது  ஜெயலலிதா சசிகலா ஆகியோர் பேசிய வீடியோ ரெடியாக இருப்பதாகவும், அதை நேரம் வரும்போது வெளியிட இருப்பதாகவும், சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரனின் மகன் மிரட்டி உள்ளார்.

75 நாட்களாக சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா குறித்து எந்தவித படமோ, வீடியோவோ வராத நிலையில், தற்போது திவாகரனின் மகன் ஜெயானந்த், ஜெ.- சசி உரையாடிய வீடியோ இருப்பதாக குறிப்பிட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு உடல்நலமில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்தும், அவரை பார்க்கவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ராகுல் காந்தி, தமிழக கவர்னர், பிரபல தொழிலதிபர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக  கவர்னர், தமிழக அமைச்சர்கள்  முதல்,  யாரையுமே  ஜெயலலிதாவை பார்க்கவோ, சந்திக்கவோ சசிகலா அனுமதிக்கவில்ரலை.

மேலும் ஜெ.சிகிச்சை பெற்ற வார்டு பகுதியில் இருந்த காமிராக்கள் அனைத்தையும் அகற்றியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், தொடர்ந்து அவரது  மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்  அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளும், அதிமுக தொண்டர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதுகுறித்து வழக்கும் நிலுவையில் உள்ளது.

ஜெ. மரணம் குறித்து  விளக்கம் அளித்த அப்பல்லோ நிர்வாகம், மற்றும் டாக்டர் பீலே, மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  நோயாளிகள் சிகிச்சை பெறுவது குறித்த போட்டோக்கள் வெளியிடுவது மரபல்ல என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சும் ஜெயலலிதா மரணம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகன் ஜெயானந்த, தனது  முகநூல் பக்கத்தில் ஜெயலலிதா, சசிகலா உரையாடிய வீடியோ பதிவு  இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

அதில், நோயாளிக்கான உடையில் ஜெயலலிதாவை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதாலேயே, அவரது சிகிச்சைப் படம் வெளியிடப்படவில்லை என்று கூ‌றியுள்ளார்.

இது சசிகலாவின் தியாகச் செயல் என்று ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மாதிரி சவப்பட்டியை வைத்து பன்னீர்செல்வம் அணியினர் வாக்கு சேகரித்ததை அவர் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவும், சசிகலாவும் மருத்துவமனையில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால் பன்னீர்செல்வத்தையும் அவர்களது அணியினரையும் என்ன செய்யலாம் என்று கேள்வி எழுப்பியுள்ள ஜெயானந்த், அந்த நாள் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

திவாகரன் மகனின் இந்த வீடியோ அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பல்லோ நிர்வாகம், அரசு, மருத்துவர்கள் அனைவரும் எந்தவித படமோ, வீடியோவோ இல்லை என்று சொல்லிவந்த நிலையில், சசிகலா அண்ணன் மகன் தற்போது வீடியோ உள்ளது என்று கூறியிருப்பது அரசியல் கட்சியினரிடையே சந்தேகத்தை உருவாக்கி உள்ளது-

ஜெ. சிகிச்சை குறித்து எந்தவித படமும் கிடையாது என்று அறிவித்து வந்திருந்த நிலையில், தற்போது திவாகரன் மகன் வீடியோவே இருக்கிறது என்று அறிவித்திருப்பது, ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகளை சசிகலா குடும்பத்தினர் மறைத்து வருவதையே காட்டு வதாக கூறப்படுகிறது.

தற்போது திவாகரன் மகன் ஜெயானந்த் கூறுவதுபோல, ஜெயலலிதபாவின்  போயஸ் கார்டன் இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி பதியப்பட்ட வீடியோவையும், ஜெயலலிதா மயங்கி விழுந்தபோது பதிவான காட்சிகளும் வெளியிடுவாரா என்றும்,

அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றது, அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த வீடியோவையும் வெளியிடுவாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவராகவே, ஜெயலலிதா சிகிச்சையின்போது  ஜெ. சசி பேசிய வீடியோ இருக்கிறது என்பதால், அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும், அவரது நடவடிக்கைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்  குறித்தும் கண்டிப்பாக சசிகலா குடும்பத்தின்ர் வீடியோ  பதிவு செய்திருப்பார்கள்.

ஆகவே அந்த வீடியோக்கள் அனைத்தையும் திவாகரன் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அவர்கள் வீடியோவை வெளியிட்டால், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்ற வாதம் பொய்த்து விடும் என்றும்,  தமிழக மக்களின் சந்தேகமும் தீர்ந்துவிடும்… இதன் காரணமாக சசிகலாவும் தமிழக மக்களின் மன சிம்மாசனத்தில் இடம்பிடித்து விடுவார் என்றும் கூறுகிறார்கள்…

எனவே மற்ற வீடியோக்களையும் வெளியிட அதிமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திவாகரன் மகன்  ஜெயானந்த் வெளியிடுவாரா…..?