க்னோ

க்களவை தேர்தலில் வாக்காளர்கள் தங்களை மகிழ்வாக வைக்கும் அரசை தேர்வு செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளர்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் 117 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி அமைந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை தேர்தலில் 117 தொகுதிகளில் நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து பெரும்பான்மையான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். வாக்களிப்பு என்பது மக்களின் அடிப்படை அரசியல் உரிமை ஆகும்.

வாக்காளர்கள் தங்களை மகிழ்வுடன் வைத்திருக்கும் அரசை தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பாஜக ஆட்சியில் நாட்டின் 130 கோடி மக்களும் குறிப்பாக படித்து வேலை இல்லாதவர்கள் மிகவும் மகிழ்ச்சியை இழந்துள்ளனர். வேலை வாய்ப்பு கேட்ட இளைஞர்களை பக்கோடா விற்க சொன்ன பாஜகவை வீட்டுக்கு அனுப்ப அவர்கள் தயாராக உல்ளனர்.” என தெரிவித்துள்ளார்.