டில்லி

மூத்த ராணுவ அதிகாரிகள் 150 பேர் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் குறித்தும் அதற்கு இந்திய விமானப்படை அளித்த பதில் தாக்குதலான பாலகோட் தாக்குதல் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.   இது குறித்து  காங்கிரஸ் கட்சி  பிரதமர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாக புகார் அளித்தது.

இந்நிலையில் நேற்று 150 மூத்த ராணுவ அதிகாரிகள் இணைந்து பிரதமர் ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.  அந்த கடிதத்தில் மூன்று முன்னாள் ராணுவ தலைவர்கள்,  நான்கு முன்னாள் கடற்படை தலைவர்கள் மற்றும் முன்னாள் விமானப்படைதலைவர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில்

“கடந்த பல வருடங்களாக இந்த கடிதத்தை அனுப்பும் மூத்த ராணுவ அதிகாரிகளான நாங்கள் போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் பல வருடங்களாக பணிபுரிண்டு வருகிறோம்.   நமது முப்படை வீரர்களின் அரசியல் சார்பின்மை மற்றும் மதசார்பற்ற தன்மை அனைவரின்  நம்பிக்கையை பெற்றது ஆகும்.   மேலும் நமது ராணுவத்தினரின்  குடியாட்சி  மீதான நம்பிக்கை போற்றுதலுக்கு உரியதகும்.

நமது ராணுவம் மற்றும் அரசியலைப்பு சட்டம் என்பது உங்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் சட்டப்படி வருகிறது.   அதனால் நாங்கள் அனைவரும் உங்களுக்கு கீழ் பணி புரிந்து வௌகிறோம்.   நீங்களே அனைத்து ராணுவப்பிரிவுக்கும் தலைவர் ஆவீர்கள்.  ஆகையால் இந்த கடிதத்தை நாங்கள் எழுதுகிறோம்

ஆனால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஆளும் கட்சியான பாஜக ராணுவ நடவடிக்கைகளை தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறது.   இதை நீங்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.  ராணுவம்,  ராணுவ சீருடைகள், ராணுவத்தினரின் புகைப்படங்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு உத்தரவ் இட வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் ராணுவ சீருடை அணிந்துள்ள புகைப்படங்கள் பயன்படுத்த படுகின்றன.   அது மட்டுமின்றி ராணுவ வீரர்களை  மோடியின் சேனை எனவும் கூறுகின்றனர்.   அது மட்டுமின்றி விங் கமாண்டர் அபிநந்தன் புகைப்படங்கள், சர்ஜிகல் ஸ்டிரைக் செய்திகள் ஆகியவைகளும் பிரசாரத்தில் பயன்படுத்த படுகின்றன.   இவைகளை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.