சிங்கப்பூர்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ, பிளிஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்  என , வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதன்படி சிங்கப்பூரிலும் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால், பொதுமக்களிடையே தடுப்பூசிகள் குறித்த அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்களிடையே தடுப்பூசியின் பயனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், பிளீஸ் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க…என வேண்டுகோள் விடுத்துள்ளது.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு  ஆசியாவிலேயே முதல் நாடாக  கடந்த டிசம்பர் மாதமே சிங்கப்பூர் ஒப்புதல் அளித்தது. அதன்படி அங்கு பைசர் நிறுவன தடுப்பூசி போடுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 28ஆம் தேதி  முதல் தொடங்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாகச் சுகாதார பணியாளர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தடுப்பூசிகள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் உருவாகி வருவதால்,  சிங்கப்பூர்வாசிகளில் சிலர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். இதையடுத்து, பிரதமர் லீ மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன்,   “இந்த கொரோனா தடுப்பூசி நமக்குப் பாதுகாப்பைத் தரும். மேலும், இது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பானவர்களாக மாற்றும். எனவே தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.