கொள்ளையடிக்கும் எஸ்.ஏ.சி.! தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம்

நூறு ரூபாய்க்கு ரசிகன் பார்க்க வேண்டிய படத்தை, 300, 500 ரூபாய்க்கு பார்க்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி கொள்ளையடிக்கும் எஸ்.ஏ.சி. போன்றவர்கள் பொது நலன் குறித்து பேச தகுதியில்லை” என்று பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

““சினிமா செலவு அதிகம் ஆனால் டிக்கெட் விலை அதிகம் வச்சு வித்து காசு பார்த்தால் தானே வியாபரம்?  நாங்கள் யாரையும் விஜய் படம் பார்க்க வாங்க என்று அழைக்கவில்லையே?” –   எஸ்.ஏ. சந்திரசேகர்  தந்தி தொலைகாட்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தது இது.

செருப்பால் அடித்தது போல் நன்றாகவோ கூறினீர்.. இனியாவது ரசிகர்கள் சிந்திக்கட்டும்..

நீங்கள் கூறிய வியாபார செலவு எப்படி அதிகம் ஆகிறது?  நடிகர் சம்பளம்  35 கோடி, அவருக்கு கட்டவுட் முதல் பேனர்கள் வரை செலவு செய்ய  செய்ய… படம் எடுக்கும் செலவு அதிகம் ஆக தானே செய்கிறது?

ஆக உங்கள் மகன் சம்பளம் குறைத்து கொள்ள மாட்டீர்..  பாவம் ரசிகர்கள்! நூறு  ரூபாய்க்கு பார்க்கவேண்டிய படத்தை  அப்பட்டமாக 300 ரூபாய்  500 ரூபாய் என்று விற்று கொள்ளடிக்க…  நீங்கள் எல்லாம் எப்டி ஊர் நியாயம் பேசுகிறீர்?

அதற்கு என்ன தார்மீக தகுதி சந்திரசேகர் அவர்களுக்கு இருக்கிறது?”