பிளஸ்1 பொதுதேர்வு: மாதிரி வினாத்தாள் வெளியீடு! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை:

மிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்1 தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,

பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த தேர்வை கொண்டு வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும்,  இந்த வினாத்தாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

மேலும், பிளஸ் 1, 2 மதிப்பெண்கள் 1200லிருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும்,  பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்2வில் சேர்ந்து தேர்வு எழுதலாம் என்றும் கூறினார்.

தமிழக மாணவர்களை  சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்,  கட்டமைப்பு மற்றும் கல்வி தரத்தில் தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி