சென்னை:

மிழகத்தில் பிளஸ்2 படித்துவரும்  மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களுக்கு வரும் மார்ச் 1ந்தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது.  இதையொட்டி தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் ரெடியாகி உள்ளது. இதை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ்–2 பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:

மார்ச் 1–ந்தேதி – தமிழ் முதல் தாள்.

மார்ச்  2–ந்தேதி – தமிழ் இரண்டாம் தாள்.

மார்ச் 5–ந்தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 6–ந்தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்.

மார்ச் 9–ந்தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

மார்ச் 12–ந்தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோ–பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ்

மார்ச் 15–ந்தேதி – அனைத்து தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

மார்ச் 19–ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்.

மார்ச் 26–ந்தேதி – வேதியியல், கணக்கு பதிவியல்.

ஏப்ரல் 2–ந்தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

ஏப்ரல் 6–ந்தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுத உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநர் வசுந்தராதேவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,  ‘தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ) ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி  தலைமை ஆசிரியர்கள், வரும், 26-ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

பிப்ரவரி 26-க்குப் பின், ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 பிளஸ் ஒன் பொதுத் தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்குகிறது.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்குகிறது.