பிளஸ்2 தேர்வு முடிவுகள்: 2404மாற்றுத்திறனாளிகள் , 34கைதிகள் தேர்ச்சி

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 240 4மாற்றுத் திறனாளிகள் , 34 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர்கள் தேர்வு   கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு  எழுதினர்.  இந்த நிலையில், இன்று தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில்  91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்களில் தேர்வெழுதிய 2697 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2404 பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும், அதுபோல தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.