சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், முடிவுகள் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

இந்த முறையும் வழக்கம்போல  மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதம், மாணவர்கள், 88.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள்  www.tnresults.nic.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே தங்களது மொபைல் போன் எண்களை பதிவு செய்துள்ள  மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மதிப்பெண் பட்டியலை மாணவர்கள்  நாளை முதல் 26-ம் தேதி வரை தங்களது பள்ளிகளில்  பெற்றுக் கொள்ளலாம்

தோ்ச்சி விகிதம்

இயற்பியல் – 93.89%

வேதியல் – 94.89%

உயிரியல் – 96.05%

கணிதம் – 96.25%

தாவரவியல் – 89.98%

விலங்கியல் – 89.44%

கணினி அறிவியல் – 95.27%

வணிகவியல் – 92.23%

தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட .2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.1 சதவிகிதம் இருந்த நிலையில்,  இந்த ஆண்டு  91.03 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு 90.6% இருந்த தேர்ச்சி விகிதம் 2016ம் ஆண்டு 91.4% சதவிகிதமாக அதிகரித்தது. அதுவே, 2017ம் ஆண்டு -92.1% ஆகவும், 2018 ம் ஆண்டு 91.1% இருந்த நிலையில், தற்போது 91.03 % ஆக உயர்ந்துள்ளது. படிப்படியாக தேர்ச்சி விகிதம் உயர்ந்து வருகிறது.

பிளஸ்-2 தேர்வு இந்த ஆண்டு முதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே இருந்த முதல்தாள், இரண்டாம் தாள் என்ற நிலை அகற்றப்பட்டு ஒரே வினாத்தாள் முறை அமல்படுத்தப்பட்டது. அதுபோல மதிப்பெண்ணும் 1200ல் இருந்து  600ஆக குறைக்கப்பட்டது.

‘தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்நத்  சுமார் 8,87,992 பேரும் அதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2,400 பேரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தனர்.

அதுபோல  புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 408 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.