இன்று + 2  தேர்வு முடிவு:  91.1% பேர் தேர்ச்சி

 

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.  www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.