சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு  தொடங்கியது.

இந்த ஆண்டு முதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே இருந்த முதல்தாள், இரண்டாம் தாள் என்ற நிலை அகற்றப்பட்டு ஒரே வினாத்தாள் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மொத்த மதிப்பெண்ணும் 1200ல் இருந்து  600ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்நத்  சுமார் 8,87,992 பேரும் அதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2,400 பேரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்

இந்த தேர்வு சென்னையில்  158 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த  408 பள்ளிகளில் இருந்து  26 ஆயிரத்து 285 மாணவிகளும்,  23 ஆயிரத்து 134 மாணவர்கள் என மொத்தம் 49 ஆயிரத்து 419 பேர் எழுதுகின்றனர்.

அதுபோல  புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 408 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்ட 150 புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம்  2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 884 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதுகின்றனர்.

மதுரை, வேலூர், கடலூர், சேலம், கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  வரும் 19-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடக்கிறது.