பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 8லட்சத்து 88ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்…

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நாளை (வெள்ளிக்ழமை) தொடங்குகிறது. இந்த கல்வி ஆண்டில் சுமார் 8லட்சத்து 88ஆயிரம்  மாணவ மாணவிகள் தேர்வை எழுத உள்ளார்கள்.

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், எழுத்துத் தேர்வுகள் நாளை தொடங்குகிறது. இதற்கான தேர்வு நடைபெறும் பள்ளிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியாகாதவாறு காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழ் முதல்தாள், தமிழ் இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல்நாள், இரண்டாம் தாள் என்றும் மொழிப்பாடங்களில் இரு தேர்வுகள் நடைபெற்று வருவது வழக்கம். ஆனால், இந்த கல்வி ஆண்டு முதல்,  இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டு இருந்தது.

அதன்படி  இந்த ஆண்டு  பிளஸ்-2 பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 600 என்று மாற்றப்பட்ட நிலையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ மாணவிகள் தேர்வுகள் எழுத உள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு பெயிலான மாணவர்கள், தனித்தேர்வர்கள் போன்றோர் பழைய நடை முறை (1200 மதிப்பெண்)யில் 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

அதுபோலபுதிய நடைமுறையிலும்  1,144 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். ஆக மொத்தம்  என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கால அட்டவணை 

2019 மார்ச் 1- தமிழ்

2019 மார்ச் 5- ஆங்கிலம்

2019 மார்ச் 7- கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.

2019 மார்ச் 11- இயற்பியல், பொருளாதாரம்.

2019 மார்ச் 13- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

2019 மார்ச் 15- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

2019 மார்ச் 19- உயிரியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கியல் மற்றும் தணிக்கை.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2019-20 academic year, 8, 87, 992 students, Plus-2 public examination, Tamilnadu education, தேர்வு தொடக்கம், பிளஸ்2 பொதுத்தேர்வு
-=-