பிளஸ்2 தேர்வு முடிவு: முதல் 3இடத்தை பிடித்த கொங்கு மாவட்டங்கள்… விவரம்

சென்னை:

மிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியாகி உள்ளது.  92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் 3 இடங்களை திருப்பூர், ஈ ரோடு, கோவை மாவட்டங்கள் பிடித்துள்ளன.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  திடீரென வெளியாகின. பிளஸ்2 தேர்வின் கடைசி தேர்வை கொரோனா ஊரடங்கால் பலர் எழுத முடியாத நிலையில்,  அவர்களுக்கு வரும் 27ந்தேதி தனித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று  இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தேர்வு முடிவுகளை https://www.dge.tn.gov.in/result.html என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகி உள்ளது.

தேர்ச்சி விகிதம்:

தமிழகத்தில் உள்ள மொத்த  மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 7,127. இவற்றில்  100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்ப பள்ளிகளின் எண்ணிக்கை 2,120

பிளஸ்2 தேர்வு எழுதியவர்களில் மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.3%. அவர்களில்  மாணவியர் 94.80%, மாணவர்கள் 89.41%. மாணவர்களைவிட மாணவிகள் 5.39% அதிகம் கூடுதல் தேர்ச்சி.

அரசு பள்ளி மாணாக்கர்கள்  85.94% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சியும்,   மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சியும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72% தேர்ச்சியும்,  பெண்கள் பள்ளிகள் 94.81% தேர்ச்சியும்,  ஆண்கள் பள்ளிகள் 83.91 தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்:

திருப்பூர் மாவட்டம் முதலிடம் 97.12% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.

2வது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. அங்கு 96.99% தேர்ச்சி

3வது இடத்தை 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் பிடித்துள்ளது.

பாடப்பிரிவுகளில்  தேர்ச்சி சதவிகிதம்:

அறிவியல் பாடப் பிரிவுகள் 93.64%
வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.96%
கலைப்பிரிவுகள் 84.65%
தொழிற்பாடப்பிரிவுகள் 79.88%

பாடம் வாரியாக தேர்ச்சி சதவிகிதம்:

இயற்பியல் 95.94%
வேதியியல் 95.82%
உயிரியல் 96.14%
கணிதம் 96.31%
தாவரவியல் 93.95%
விலங்கியல் 92.97%
கணினி அறிவியல் 99.51%
வணிகவியல் 95.65%
கணக்குப் பதிவியல் 94.80%

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2835. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2506.

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 50.