19ந்தேதி வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சென்னை:

மிழகத்தில் கடந்த மார்ச் 1ந்தேதி தொடங்கி 19ந்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள்  திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை)  வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரி யர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், 19ந்தேதி அன்று கிறிஸ்தவர்களின் புனிதா நாளான பெரிய வெள்ளி கொண்டாடப்படுகிறது. இதனால் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப் படும் தேதி மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது.

ஆனால், தேர்வு முடிவு வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும்,  ஏற்கனவே அறிவித்த படி19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு  இணையதளத்தில் வெளியிடப்படுகிறது  தேர்வர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழே உள்ள இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in