சென்னை:

மிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. இதன் காரணமாக தேர்வை எழுதிய மாணவர்கள் மதிப்பெண்களை குறித்த அச்சத்துடனும், பரபரப்புடன் காணப்படுகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி,  நாளை காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படு கிறது. . தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே மொபைல் போன் எண்கள் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு அவர்களது மொபைல் போனுக்கு ரிசல்ட் அனுப்பி வைக்கப்படுகிறது.

தேர்வர்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, அரசின் இணையதளத்தில் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.மேலும், தங்களின் பள்ளிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ள அரசு அறிவித்துள்ள இணையதள முகவரி:

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in 

dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில், முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தற்காலிக மதிப்பெண்கள் பட்டியலை  20ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, தங்கள்பள்ளிக்குச் சென்று இணையதளத்தில்பதிவிறக்கம் செய்யலாம்.

தனித் தேர்வர்கள், வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.

ஜூன், 6 முதல், 13 வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

மதிப்பெண் குறித்து மனஅழுத்தத்தில் தவிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள்  ஆறுதல் தெரிவித்து அரவணையுங்கள்… தேவையில்லாமல் மதிப்பெண் குறித்து குறை சொல்வதை தவிருங்கள்…