பிளஸ் டூ தேர்வில்  சிறைவாசிகள் சாதனை

download

சென்னை:

பிளஸ் டூ தேர்வில் சிறைவாசிகள் (சிறைக்கைதிகள்) சாதனை புரிந்துள்ளனர்.  தேர்வு எழுதிய 103 பேரில் 97 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகளே இந்த முறையும் மாணவர்களைவிட அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய 103 சிறைவாசிகளில் 97 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  6 பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர்.

தேர்ச்சி அடைந்த 97 பேரில் 94 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.

இவர்களில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதி பாபநாசம் 1084 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.  திருச்சி சிறை கைதி ஒமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் பரூக்கான் 1048 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி