சென்னை,

பிளஸ் 2 ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

பிளஸ்2 ரிசல்ட் கடந்த மே மாதம் 12ந்தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து மாணவ மாணவி களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்மூலம் தங்களது மேற்படிப்புக்கான தேவைகளை நிறைவேற்றி வந்தனர்.

இந்நிலையில், தற்போது பிளஸ்2 முடித்தவர்களுக்கு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழை வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

வரும் 10-ம் தேதி (அடுத்த திங்கட்கிழமை) முதல் ஒரிஜினில் மார்க் சர்டிபிகேட் வழங்கப்படும்  என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு தேர்வெழுதியவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியில் ஜூலை 10 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.