யாருடனும் யாரையும் ஒப்பிடாதீங்க நடிகர் விவேக் அட்வைஸ்..

கிரீன் சேலஞ்ச் இந்தியா முழுவதும் நடிகர் நடிகைகள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. மரங்கள், காடுகள் அழிக்கப்படும் சூழலில் ஊரெங்கும் புதிய மரங்கள் வளர்ப்பதே கிரீன் சேலஞ்ச் நோக்கம். பல நடிகர்கள் இந்த நற்பணியை செய்து வரும் நிலை யில் சில தினங்களுக்கு முன் தனது பிறந்த தினத்தை கொண்டாடிய மகேஷ்பாபு அவரது வீட்டில் மரம் நட்டு,’ இதுபோல் நடிகர் விஜய், ஜூனியர் என் டி ஆர், ஸ்ருதி ஹாசன் செய்ய வேண்டும்’ என்று சவால் விட்டார். அதனை ஏற்று நடிகர் விஜய் தனது வீட்டில் மரம் நட்டு அதற் கான வீடியோ , ஸ்டில்களை பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில் சிலர் நடிகருக்கு நடிகரை ஒப்பிட்டு கமெண்ட் பகிர்ந்தனர். அதுகுறித்து நடிகர் விவேக் கருத்து வெளி யிட்டார். அதில்.’மகேஷ் பாபு சார், விஜய் சார் இருவரும் லட்சக்கணக்கான ரசிகர் களை கொண்டுள்ளனர். இயற்கைக்கு அவர்கள் அனுகூலமாக செய்யும்போது அந்த நடிகர்களின் நற்செயலை அவரது ரசிகர்களும் செய்கிறார்கள். அதை பாராட்ட வேண்டும். தயவு செய்து ஒருவரையொருவர் ஒப்பிடாதீர்கள். நம்முடைய முழுமையான நோக்கம் பசுமை இந்தியா
இவ்வாறு விவேக் கூறி உள்ளார்.

You may have missed