அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது: மோடி பிரஸ்மீட் குறித்து ப.சிதம்பரம் டிவிட்

சென்னை:

மைதியில் கூட அர்த்தம் இருக்கிறது: மோடி பிரஸ்மீட் குறித்து ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவி ஏற்றார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பிரதமர் மோடி, இதுவரை  செய்தியாளர்களை சந்திப்பை தவித்து வந்த நிலையில், ஆட்சியின்  இறுதி நாளான இன்று முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

மோடியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் நக்கல் செய்து டிவிட் போட்டிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரமும் மோடியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு, தேர்தல் முடிவு பாஜகவுக்கு பாதகமாகவே வரும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருப்பதாகவும், இதற்கு அமித்ஷாவே காரணம் என்று அவர்மீது பழியை போடுவதற்காக மோடி அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது என்ற கூற்றின் சாட்சி பிரதமர் மோடியின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாதகமானால் அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

இவ்வாறு கூறி உள்ளார்.