பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜினாமா

டில்லி

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவியது தெரிந்ததே. ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதியில் ரூ.3 லட்சம் கோடியை அரசுக்கு அளிக்க அரசு நிர்பந்தம் செய்ததால் அந்த மோதல் வலுத்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார்.

இது பொருளாதார வல்லுனர்கள் இடையே கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில் இன்று மற்றொரு பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.

பிரதமரின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை அளிக்க குழு ஒன்று உள்ளது. அந்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான சுர்ஜித் பல்லா இன்று ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவை தொடர்ந்து இன்று சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளது பொருளாதாரல் உலகில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.