டெல்லி:

பிரதமர் மோடியும், அவரது பொருளாதார வல்லுநர்களும் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பி உள்ளனர், மோடிக்கும், நிதிஅமைச்சருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தெரியாது என்று காங்கிரஸ்  எம்.பி. ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்து வரும் நிலையில், அதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத மோடி அரசு, மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்துவதிலேயே தீவிரம் காட்டி வருகிறது.  வரும் பிப்ரவரி 1ந்தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, பிரதருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது… பிரதமர் மோடியும், நிதி அமைச்சர், அவரது நிதி ஆலோசனை குழுவினரும் இதற்கு காரணமானவர்கள், அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளர்.

ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தி: 7.5%, பணவீக்கம்: 3.5%

இப்போது: மொத்த உள்நாட்டு உற்பத்தி: 3.5%, பணவீக்கம்: 7.5% உள்ளதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி,  அடுத்து என்ன செய்வது என்று PM & FM க்கு முற்றிலும் தெரியாது என்று கூறி உள்ளார்.