வாஷிங்டன்:

ற்போது அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ராணுவம், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பு மற்றும்  ராணுவப் பயிற்சி அளித்தது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இம்ரான்கான் டிரம்ப இடையே சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினை குறித்து, இந்தியா சம்மதித்தால் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று டிரம்ப் மீண்டும் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத குழுக்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கியது வருவதை உறுதிசெய்தார்.

ஏற்கனவே  சிஐஏ உதவித்தொகையின் கீழ் ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புக்களை எதிர்த்துப் போராடிய முஜாகதீன் என்று அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் நீண்ட காலமாக உதவி செய்து வருவது  அறியப்பட்டாலும், தற்போதுதான் முதன் முறையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதை நேரடியாக உறுதிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் வசித்து வந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீதான பயங்கரவாத ஆதரவு முத்திரை உலக நாடுகளுக்கு தெரிய வந்தது.

இந்த நிலையில் மிஷன் காஷ்மீர் அறிவிப்புக்கு பிறகு, உலக நாடுகளின் ஆதரவை கோரி வரும் இம்ரான்கான், தற்போது அல்கொத்தா பயங்கரவாதிகளுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதாக ஒப்புகொண்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை பயங்கரவாதத்தை வளர்த்து வரும் பாகிஸ்தான்  பல ஆண்டுகளாக ஜிஹாத் என்று கூறி இளைஞர்களையும்,  பட்டதாரிகளையும இந்தியாவுக்கு எதிராக தயாரித்து வருகிறது.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்று பிரதமர் தொடர்ந்து கூறி வருவது குறித்து, ஜனாதிபதி டிரம்ப் நேற்று பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானுடனான செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது , இம்ரான்கான் அதை உறுதிப்படுத்தினார். பாகிஸ்தான் ராணுவம் அல்-கைதாவுக்கு பயிற்சி அளித்ததை இம்ரான் கான் ஒப்புக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து கூறிய இம்ரான்கான்,  கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெஷாவர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பின்பு, பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நேஷனல் ஆக்‌ஷன் பிளான் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், நான் ஆட்சிக்கு வரும் வரை அதை யாரும் செயல்படுத்தவில்லை. எனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நான் வந்த பிறகுதான் துணிவுடன் முயற்சி மேற்கொண்டிருக்கிறேன் என்றும்,  பாகிஸ்தானில் ராணுவத்திடம்  ஆயுதப்பயிற்சி பெற்ற 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார் கள். அவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரில் பயிற்சி பெற்று வந்து பாகிஸ்தானில் இயங்குகிறார்கள். காஷ்மீரில் மட்டும் ஆயிரம் முகாம்களில் பயிற்சி பெற்று, பாகிஸ்தானில் இயங்குகிறார்கள். குறைந்தது 40 தீவிரவாத இயக்கங்களாவது செயல்படத் தொடங்கின என்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.