கங்கை நதியில் நீர் வழி போக்குவரத்து: மோடி தொடங்கி வைத்து பயணம்

லக்னோ:

ங்கையில் நீர்வழி போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சிறிது தூரம் கங்கை நதியில் படகில் பயணம் செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் செல்லும் கங்கையில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அதற்கான போக்குவரத்தை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், ஹல்தியா-வாரணாசி இடையில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் டன் எடையுடன் சரக்கு கப்பல்கள் இந்த நீர்வழியில் சென்று வரும் வகையில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நீர் வழி போக்குவரத்து திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், விரைவில், ‘ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்த படும் என்றும் பிரதமர் கூறி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்  மத்திய போக்குவரத்துறை அமைச்சர்  மந்திரி நிதின் கட்காரி உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் படகில் ஏறி கங்கை நதியில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர்.

உ.பி. மாநிலத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி