டெல்லி: நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே  உரையாற்ற உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மார்ச் 24ம் தேதி, பிரதமர் மோடி  அறிவித்திருந்தார். அன்று முதல்  முக்கிய விஷயங்களை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கூறி வருகிறார்.

கொரோனோ வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாநில முதலமைச்சர்ளுடன் காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந் நிலையில், நாளை மாலை (ஜூன் 30) 4 மணிக்கு அவர், நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்ற உள்ளார் என்று பிரதமர் அலுவலகம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று, 59 சீன நிறுவன செயலிகள் தடை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.