மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி: நாட்டுக்கு சேவை செய்ததாக புகழாரம்

புதுடெல்லி:

மத்திய அமைச்சர்களை சந்தித்து பிரதமர் மோடியும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் நன்றி தெரிவித்தனர்.

நாட்டுக்கு சேவை செய்த அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் என்ற பெயரில், புதுடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் கூட்டம் ஒன்றுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஏற்பாடு செய்திருந்தார்.

வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில், இந்த சந்திப்பு நடந்தது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அருண் ஜெட்லி, ஜேபி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராம் விலாஸ் பஸ்வான், ஹர்சிம்ரட் கவுர் பாதல் மற்றும் அனுபிரியா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அனைவருக்கும் அமித்ஷா விருந்தளித்தார்.