டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்ளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்கள் முயற்சி எடுத்து வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் மாநிலங்கள் இறங்கியுள்ளன. உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகம் காணப்படும் மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். பொது இடங்களில் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகள் என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.