அயோத்தி: வரலாற்று சிறப்புமிக்க ராமர்கோவில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ராமர் கோவில் கட்டிடப்பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ், உமாபாரதி உள்பட 175 முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று காலை பிரதமர் மோடி ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்காக டெல்லியில் இருந்து  அயோத்தி புறப்பட்டார்.

முதல்கட்டகமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்தடைந்தார்.  பின்னல்ர, லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.

அயோத்தியில் சுமார்  மூன்று மணி நேரம் செலவிடும் மோடி, முதலில், அங்குள்ள அனுமன் கார்ஹி கோவிலுக்கும் சென்று வழிபடுகிறார்.

அதையடுத்து, 12:00 மணிக்கு, ராம ஜன்மபூமிக்கு செல்கிறார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

மதியம், 2:00 மணியளவில், அயோத்தியிலிருந்து புறப்பட்டு, டில்லி திரும்புகிறார்.