அரசுப் பயணமாக ஜப்பான் சென்ற மோடிக்கு சிறப்பு வரவேற்பு

அரசுமுறைப் பயணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

jappan

இந்தியா – ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று ஜப்பான் சென்றார். தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் வந்து இறங்கிய மோடிக்கு ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டு அமைச்சர்கள், அரசு உயர் திகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், அங்கிருந்து இம்பரீயல் ஹோட்டலுக்கு சென்ற மோடியை ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அன்புடன் வரவேற்று பேசினர்.

இந்தியர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தனது இல்லத்தில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.