அமைச்சர்கள் காலை 9.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்! மோடி கண்டிப்பு

டில்லி:

னைத்து மத்திய அமைச்சர்களும் காலை சரியாக 9.30 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டு உள்ளார். மேலும், அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்யக்கூடாது என்றும் கண்டித்து உள்ளார்,.

பிரதமர் மோடி தலைமையில் புதிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று  நடை பெற்றது. இதில்அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.  மேலும் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் தெரிவித்து உள்பட பல்வேறு வகையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன்  அமைச்சர்கள்  அனைவரும் காலந்தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும் என்றவர், காலை சரியாக 9.30 மணிக்கு தவறாமல்  அலுவலகத்துக்கு வரவேண்டும் எனவும், வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் அமைச்சர்கள்  அனைவரும் தங்கள் தொகுதியில் மக்களை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.