கண்ணீர் விட்ட சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர்! இஸ்ரோவில் நெகிழ்ச்சி (வீடியோ)

ஸ்ரீஹரிகோட்டா:

ந்திரயான்-2 விண்வெளி பயணத்தின் கடைசி தருணத்தில், லேண்டர் கருவியில் இருந்து தகவல் தொடர்பு கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பேசிய பிரதமர் மோடி, அவர்க ளுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய நிலையில், பல விஞ்ஞானிகள் சோகத்துடனேயே காணப்பட்டனர். பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

அப்போது, பிரதமர் அருகே நின்றிருந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்த பிரதமர் மோடி அவரது தோளில் தட்டிக் கொடுத்து தேற்றினார்.

இந்தசம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

 

 

கார்ட்டூன் கேலரி