ரக்ஷா பந்தன் விழா…டுவிட்டரில் 55 பெண்களை பின் தொடர்ந்த மோடி

டில்லி:

ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு 55 பெண் பிரபலங்களை டுவிட்டரில் பின் தொடர்ந்தார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை 270 கோடி பேர் பின்தொடர்கின்றனர். பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட 438 பேரை அவரது டுவிட்டர் பக்கம் பின்தொடர்கிறது. மேலும், நரேந்திர மோடி என்ற பெயர் கொண்ட தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் 4.30 கோடி பேர் பின் தொடர்கின்றனர். 2 ஆயிரம் பேரின் டுவிட்டர் பக்கங்களை அவர் பின் தொடர்கிறார்.

இந்நிலையில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளான இன்று விளையாட்டு, ஊடகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 55 பெண் பிரபலங்களை டுவிட்டரில் மோடி பின் தொடர்ந்தார்.

பேட்மிண்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, டென்னிஸ் வீராங்கனைகளான சானியா மிர்ஸா மற்றும் கர்மான் கவுர், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா, முன்னாள் இந்திய அழகியும் குழந்தைகள் நல ஆர்வலருமான சுவரூப், பத்திரிகையாளர்கள் ரோமானா இஸார் கான், சுவேதா சிங், பத்மஜா ஜோஷி, ஷீலா பட், ஷாலினி சிங். நடிகை கோயெனா மித்ரா.

பளுதூக்கும் வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி, பத்திரிகை புகைப்படக் கலைஞர் ரேணுகா புரி மற்றும் சில பெண் பா.ஜ.க. உறுப்பினர்கள் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களையும் அவர் பின் தொடர்ந்துள்ளார். இதற்காக சிலர் பிரதமருக்கு நன்றி தெரிவித்து ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.