ரம்ஜான் நோன்பு தொடக்கத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டில்லி

ன்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதால் இஸ்லாமிய மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று பிறை தெரிந்ததையொட்டி இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் நோன்பை இன்று முதல் தொடங்கி உள்ளனர்.

இன்று நோன்பு தொடங்குவதால் பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்குத் தனது டிவிட்டரில் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார்.

மோடி,

“ ரம்ஜான் வாழ்த்துக்கள்!

அனைவரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளத்துக்காகப் பிரார்த்திக்கிறேன்.

இந்த புனித மாதம் அனைவருக்கும் கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தை அளிக்கட்டும்.

கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போரில் நாம் வெற்றி பெற்று ஒரு ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவோம்” 

என வாழ்த்தி உள்ளார்.