ரூ.3000 கோடியில் குழாய் வழியே இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

டெல்லி: குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ரூ.3,000 கோடி மதிப்பில் கொச்சி – மங்களூரு இடையே 450 கி.மீ. வரையில் குழாய் மூலமாக இயற்கை எரிவாயுவை வினியோகிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 450 கி.மீ தூரமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறேன். இந்தியாவுக்கு, குறிப்பாக கர்நாடகா, கேரள மக்களுக்கு முக்கிய நாள்.

முந்தைய ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்திற்கான காரணங்களை நான் பேச விரும்பவில்லை. ஆனால், அண்மைக்காலமாக நாட்டில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று பேசினார்.