உலகின் மிகப்பெரிய பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!

லகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

சுதந்திரபோராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சர்தார் வல்லபாய் படேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக விளங்கினார். நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாக பிரிந்திருந்த இந்தியாவை ஒரு தேசமாக்கியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. குஜராத்தைச் சேர்ந்த இவருக்கு அம்மாநிலத்தில் வதோதரா அருகே 182 மீட்டர் உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். ஒற்றுமை சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக பிரதமர் மண்ணையும் நர்மதா ஆற்று நீரையும் ஒரு கலசத்தில் ஊற்றினார்.

இதுவரை உலகில் இருக்கும் உயரமான சிலை என்றால் அது சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். அதன் உயரம் 419 அடி. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலையாக பட்டேல் சிலை திகழும். இந்த  சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி ஆகும்