தேர்தலின்போது டீக்கடைக் காரர் இப்போது ரஃபேலாக்காரர்: பிரதமர்  மோடி மீது மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா:

தேர்தலின் போது டீக்கடைக் காரராக இருந்த மோடி, தற்போது ரஃபேலாக்காரராக மாறிவிட்டார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த எதிர்கட்சிகளின் மகா பேரணியை மகா கலப்படம் என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.

கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதற்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பு தன்னை டீக்கடைக்காரர் என்று மோடி சொல்லிக் கொண்டார்.

ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர் ரஃபேலாக்காரராகிவிட்டார்.
பிரதமருக்கு இந்தியாவை தெரியாது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் கலவரங்களுக்குப் பிறகே அவர் இந்த நிலையை அடைந்துள்ளார்.

அவர் ரஃபேலாவில் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மாஸ்டர். ஊழலில் மாஸ்டர். அகந்தையில் மாஸ்டர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால், மோடிக்கு பயம் வந்துவிட்டது.

ஓரணியில் திரண்டுள்ள எதிர்கட்சித் தலைவர்களை எல்லாம் சிபிஐ அமைப்பை வைத்து மிரட்டிப் பார்க்கிறார் என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.