குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உள்நாட்டு பயணத்துக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டுக்கு சென்றால் போயிங் 747 ரக ’ஏர் இந்தியா ஒன்’ விமானத்தை பயன்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் பிரமிக்க செய்யும் வசதிகள் கொண்ட போயிங் 777 ரக விமானத்தை, குடியரசு தலைவர் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பயன்பாட்டுக்கு வாங்கியுள்ளது, ஏர் இந்தியா நிறுவனம்.

இவ்வாறு வாங்கப்பட்டுள்ள இரண்டு விமானங்கள், அமெரிக்காவில் நவீன வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளன.
அந்த விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து ’ஸ்பெஷெல்’ குழு அமெரிக்கா சென்றுள்ளது..
ஏர்-இந்தியா அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இந்த குழுவில் அடங்குவார்கள்.
இந்த நவீன விமானத்தின் பயண தூரத்துக்கு ‘வானமே எல்லை’.
ஆம்.
புறப்பட்ட இடத்தில் இருந்து எங்குமே நிற்காமல் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானத்தில் ஒரே மூச்சில் உலகை சுற்றி வரலாம். அவசரத்துக்கு நடுவானில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம்.
இதுபோன்ற விமானத்தை இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் தான், பயன்படுத்தி வந்தார்கள். ‘AIR FORCE ONE’ என அழைக்கப்படும், அந்த விமானங்களுக்கு நிகரான வசதிகள், ஏர் இந்தியா வாங்கும் புதிய விமானத்திலும் உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக, நமது ஜனாதிபதியும், பிரதமரும் அது போன்ற விமானத்தை பயன்படுத்த உள்ளனர்.’இரும்புகோட்டை’’ என வர்ணிக்கப்படும் இந்த விமானத்தை, எதிரி விமானங்களால் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.

இந்த விமானங்கள், ஏர் இந்தியா பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், இதனை ஏர் இந்தியா விமானிகள் ஓட்ட முடியாது.

இந்திய விமானப்படை விமானிகள் தான், இந்த ஸ்பெஷல் விமானத்தை இயக்குவார்கள்.

-பா.பாரதி.