பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி கண்டிப்பு!

டெல்லி,

நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்படும் பொழுது பாஜக உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இன்று டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றும், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளி்ன்   உதவியோடும்  பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது.

5 மாநிலங்களிலும் பாஜக பெற்ற எம் எல் ஏக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மாநிலங்களவையில் இக்கட்சியின் எம்பிக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

அதனால் இனி எந்த மசோதா கொண்டு வந்தாலும் எதிர்ப்பில்லாமல் நிறைவேற்றிவிட முடியும் என அக்கட்சியின்தலைமை நம்புகிறது.

அதனால் நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை,மற்றும் மாநிலங்களவை  பாஜக உறுப்பினர்கள் மசோதா தாக்கல் செய்யப்படும்போது கண்டிப்பாக அவைக்கு வந்துவிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.