சென்னையை சேர்ந்த 5 ரூபாய் மருத்துவரை ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் புகழந்த மோடி!

மனதின் குரல் என்ற ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சென்னையை சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனை புழந்துள்ளார்.

maan

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதன்படி 51வது மற்றும் 2018ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று மோடி பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி மறைந்த சென்னையை சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனை புழந்துள்ளார். நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது, “ஒருவருடைய சொந்த வாழ்க்கையாகினும் சரி அல்லது நாட்டின் வாழ்க்கையிலும் கடந்து வந்த பாதையை நாம் பார்ப்பது அவசியம். அதேபோல எதிர்காலத்தையும் பற்றி நமக்குப் பார்வை இருக்க வேண்டும். 2018-ம் ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் நல்ல விஷயங்களை நிரப்பி இருக்கிறது.

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டது. இது ஒற்றுமையை குறிக்கிறது. எளிதாகத் தொழில் செய்யும் நாடுகளில் குறித்த தரவரிசையில் நம்நாடு முன்னேறி இருக்கிறது. ஸ்வச் பாரத் திட்டம் வெற்றி அடைந்து 95 சதவீத மக்களை நோக்கிச் சென்றுள்ளது.

சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் 5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து சேவை புரிந்தார். அவரின் சேவை ஈடு இணையில்லாதது. அதேபோல், கர்நாடகாவை சேர்ந்த நரசம்மா என்ற பெண் 15 ஆயிரம் பிரசவங்கள் பார்த்து சேவை புரிந்துள்ளார்.

வரும் குடியரசு தின விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போஷ சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அடுத்து மக்கள் கொண்டாட உள்ள பொங்கல், மகர சங்கராந்திம், மாகபிகு, மாஹி பூர்ணிமா உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் “ என பிரதமர் மோடி பேசினார்.