9 கோடி விவசாயிகளுக்கு, கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகை: பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: 9  கோடி விவசாயிகளுக்கு, ‘கிசான்’ திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் மோடி வழங்கினார்.

பிரதமரின் ‘கிசான்’ திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், 3 தவணைகளாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இப் பணம், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும்.

இந் நிலையில் ஆண்டின் 3வது தவணையாக, 9 கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வினியோகிக்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகை வழங்கும் பணியை காணொளி காட்சி வழியாக பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்து, 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

முதலில் ஒடிசா மாநில விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: கிசான் கிரெடிட் கார்டு வழியாக, குறைந்த வட்டியில் விவசாயிகள் கடன் பெற முடியும். இதை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.