புதுடெல்லி:
பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 5.54 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றும் மான் கி பாத் நிகழ்ச்சி வெளியாகும். அந்த வகையில் நேற்று வெளியான மான் கி பாத் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த வீடியோவை சில மணி நேரங்களில் லட்சக் கணக்கானோர் டிஸ்லைக் (எதிர்ப்பு) செய்தனர். ஆனால் லைக்குகள் சில ஆயிரங்களிலேயே இருந்தது. இந்த டிஸ்லைக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு 5.54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்லைக் செய்துள்ளனர்.

அத்துடன் வீடியோவிற்கு கீழே கமெண்ட் செய்துள்ளவர்களில் பெரும்பாலானோர், பிரதமர் மோடி நீட், ஜே.இ.இ தேர்வுகள் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் தேவையானவற்றை பற்றி பேசமால், பொம்மைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் குறித்து பிரதமர் பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் மாணவர்களே பெரும்பாலும் அந்த வீடியோவை டிஸ்லைக் செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 82 பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.