கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி !

--

 

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்  “நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும்”  என்று சமூக வலைதளத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி ஃபிட்னெஸ் சேலன்ஜ் (FitnessChallenge) என்ற ஹேஷ்டேக் மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி முயற்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிடுங்கள் என்று கோரியுள்ளார்.

 

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் மெடலிஸ்ட் சாய்னா நேவால், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஆகியோருக்கு ஃபிடனஸ் சவால் விடுத்தார்.

 

அவரது  சவாலை ஏற்று விராட் கோலி தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, அதில் பேசினார். மேலும், அவர் இந்த சவாலை பிரதமர் நரேந்திர மோடியையும், தோனியையும் குறிப்பிட்டு டேக் ; செய்தார்.

இதைத் தொடர்ந்து ட்விட்டரில் விராட் கோலிக்கு பதிலளித்த மோடி உங்களின் சவாலை ஏற்றுக்கொண்டேன், விரைவில் என் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவேன் ; என பதிவிட்டுள்ளார்.