புதுடெல்லி :

எதிர்க்கட்சிகளை தாக்கும்போது, பிரதமர் மோடி பேச்சில் கிண்டல் இருக்கும். ஆனால் வாய் குளறும் குழந்தைகளை பிரதமரே கிண்டல் செய்தால்….

கடந்த சனிக்கிழமை உத்தரகாண்ட் மாநிலம் கரக்பூரிலிருந்த மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அவர்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டுக்கொண்டார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் பலருக்கும் நகைப்பை ஏற்படுத்தியது.

அப்போது தீக்சா என்ற மாணவி பேசும்போது, ” உங்கள் முன்பு பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பை பாக்கியமாகவே கருதுகிறேன். பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகத்தில் நான் பி.டெக். படித்து வருகிறேன்.

வாய் குளறும் குழந்தைகள் கற்பதிலும் எழுதுவதிலும் தாமதமாக இருந்தாலும், அவர்களது புத்திசாலித்தனமும் கற்பனை வளமும் அதிகமாகவே இருக்கும். தாரே ஜமீன் பர் படத்தில் நாம் பார்த்த தர்ஷன் சபாரி வேடம் போல….

பேசிக்கொண்டிருக்கும்போதே குறிப்பிட்ட பிரதமர் மோடி, வாய் குளறும் குழந்தைகள் தொடர்பாக நகைச்சுவை கதை சொல்ல ஆரம்பித்தார்.
இந்தத் திட்டத்தை 40 வயதில் இருந்து 50 வயது வரையிலான வாய் குழறும் குழந்தைகளுக்காக செயல்படுத்தலாம் என்று கூறி, தானே சொன்ன ஜோக்குக்கு அவரே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

மோடி சிரிப்பதை பார்த்து அங்கிருந்த மாணவ மாணவிகளும் சிரிக்க ஆரம்பித்தனர். அதோடு தனது ஜோக்கைவாய் வாய் குளறும் குழந்தையின் பெற்றோரின் கதையை கூறியும் மோடி தொடர்ந்தார்.

இந்த குழந்தைகளின் தாய்மார்கள் சந்தோசமாக இருப்பார்கள் கூறிவிட்டு அவரே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். வேறுவழியின்றி மாணவர்களும் தலையெழுத்தே என சிரிக்க ஆரம்பித்தனர்.

வாய் குளறும் குழந்தைகள் பற்றியும் அவர்களது பெற்றோர்கள் பற்றியும் பிரதமர் மோடி ஜோக் சொல்லி அவரே சிரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாய் குளறும்  குழந்தைகளோடு ராகுல் காந்தியை மாணவர்கள் மத்தியில் மோடி ஒப்பிட்டுப் பேசியது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுவதாக பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.