விஜய் ரூபானி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு! மோடி பங்கேற்பு

காந்திநகர்,

குஜராத் முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களை பிடித்து வெற்றிபெற்ற பாரதியஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தது. அதையடுத்து இன்று புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடை பெற்றது.

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி 2வது முறையாக  மீண்டும் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஓம்பிரகாஷ் கோலி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர் நிதின் பட்டேல் ஆகியோருடன் 18 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.