நாளைக் காலை 10 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன்  பிரதமர் ஆலோசனை

டில்லி

ரடங்கு நீட்டிப்பு குறித்து நாளைக் காலை 10 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

கொரோனா பாதிப்பை முன்னிட்டு க்டந்த் மார்ச் 25 முதல் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஆயினும் பாதிப்பு குறையாததால் பிரதமர் மோடி அப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஊரடங்கு நீட்டிப்பு நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

இந்த கூட்டம் நாளைக் காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது.