நாளை மாணவர்களுடன் தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாடல்

டில்லி

நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாட உள்ளார்.

மோடியின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் திட்டங்களில் தூய்மை இந்தியாவும் ஒன்றாகும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது

இந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லா கிராமங்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாளை ராஷ்டிரிய ஸ்வச்சதா கேந்திரா என்னும் தேசிய தூய்மை மையத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க  உள்ளார்.

அதன் பிறகு அவர் நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் தூய்மை இந்தியா குறித்து உரையாட உள்ளார்.