புது டெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

 

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இதன்படி இன்று பகலில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்கின்றனர்.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.