லக்னோ:

உ.பி. மாநில தலைமைச்செயலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஆங்கிலேயர்களுக்கு எதிராக  1942-ம் ஆண்டு ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடினார். பின்னர் ஆர்எஸ்எஸ்-சில் அதிக ஈடுபாடு கொண்டவர் பாரதிய ஜனதாக கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார்.

வாஜ்பாய் 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதி எம்.பி.யாக தொடர்ந்து ஐந்துமுறை இவர் வெற்றி பெற்றுள்ளார். அதையடுத்து,  இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார்.

மறைந்த வாஜ்பாயை கவுரவப்படுத்தும் வகையில், யோகி தலைமையிலான மாநில பாஜக அரசு, மாநில தலைமைச்செயலகம் அமைந்துள்ள லோக்பவனில் வளாகத்தில் வாஜ்பாய் முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவி உள்ளது.

இந்த சிலையை, பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். வாஜ்பாயின் 95-வது பிறந்த தினத்தையொட்டி இந்த வெண்கலச்சிலை திறக்கப்படுகிறது.