ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி (பைல் படம்)

டில்லி:

மீப காலமாக மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்துள்ள பிரதமர் மோடி, வரும் 21ந்தேதி ரஷ்யா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் பாலஸ்தீனம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார். பின்னர் கடந்த   மாதம் சீனா சென்று  வந்திருந்த நிலையில், தொடர்ந்து நேபாளத்திற்கு சென்றார். இந்நிலையில், தற்போது ரஷ்யா செல்ல இருக்கிறார்.

மோடி ரஷ்யா செல்ல இருப்பதையொட்டி, ஏற்கனவே இரண்டு முறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டவல் ரஷ்யா சென்று வந்துள்ளார். அதுபோல  பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம் மாதவ் மூத்த அதிகாரிகளுடன்  மாஸ்கோவிற்கும் சோச்சிவிற்கும் விஜயம் செய்தார்.  அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ரஷியாவுக்கு பயணமாக இருக்கிறார்.

அரசுமுறை பயணமாக ரஷ்யா செல்லும் பிரதமர் ரஷியாவின் சோச்சி நகரில் ரஷ்ய பிரதமர் புதினை சந்தித்து இரு நாட்டு உறவுகள் மேம்பபடுவது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், இரு தரப்பினரிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.