மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

பீகார்:
பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நிதிஷ் குமார், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது தேஜஸ்வி யாதவ்-ஐ தனிப்பட்ட முறையில் நிதிஷ் குமார் தாக்கி பேசினார். லாலு பிரசாத்திற்கு மொத்தம் 9 பிள்ளைகள். இதில் 8-வது நபர் தேஜஸ்வி யாதவ். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள்தான் அதிகம்.

நிதிஷ் குமார் ‘‘யாராவது கவலைப்பட்டார்களா? அவர்களுக்கு 8-9 குழந்தைகள் உள்ளன. அவர்கள் பெண்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களுக்கு அதிகமான பெண்கள் குழந்தைகள் இருந்த பின்னர், ஆண் குழந்தை பிறந்தது. பீகாரையும் அதுபோன்று ஆக்க விரும்புகிறார்கள். நீங்களே அதைப் பார்க்கலாம்’’ என்றார். ஒன்பது குழந்தைகளில் 8-வது குழந்தை ஆண் என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு தேஜஸ்வி கூறுகையில் ‘‘நிதிஷ் குமார் அவமானம் படுத்தியதை வாழ்த்தாக பெறுகிறேன். அவர் பெண்கள் மற்றும் எனது தாயாரின் சென்டிமென்ட்-ஐ அவமானம் படுத்திவிட்டார்.

அவர் எனது குடும்பத்தை குறித்து பேசியதாக, பிரதமரை பேசிவிட்டார். பிரதமருடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இதுபோன்ற கருத்துக்கள் பெண்களையும், என்னுடைய தாயாரையும் அவமானம் படுத்திவிட்டார். அவர்கள் ஊழல், வேலையின்மை போன்ற ஏராளமான பிரச்சினைகளை பேசவில்லை’’ என்றார்.