லக்னோ:

றைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது  பிறந்தநாளை முன்னிட்டு உ.பி. மாநில சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் முழுஉருவ சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது  பிறந்தநாளை முன்னிட்டு, இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து உ.பி. சென்ற பிரதமர் மோடி, உ.பி. மாநில தலைமைச்செயலகம் அமைந்துள்ள லோக் பவன் நுழைவு வாயிலில் வாஜ்பாயின் பிரம்மாண்ட வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ரூ.89 லட்சம் மதிப்பீட்டில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ்குமார் பண்டிட் என்பவரால் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

வளாகத்தில் நிறுவிய 25அடி உயர வாஜ்பாய் முழுஉருவ வெண்கலச் சிலையை மோடி திறந்து வைத்தார்.  அதைத்தொடர்ந்து, லக்னோவில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேசம் மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.